Electronics (இலத்திரனியல்) Short Notes

 


Electronics (இலத்திரனியல்) Short Notes

 



🔰தனிக்குறைக்கடத்திப்பளிங்கு ஒன்றின் ஒரு பகுதியை p- வகை குறைக்கடத்தியாகவும் , மற்ற பகுதியை n- வகையாகவும் மாற்றுவதன் மூலம் p-n சந்தி இருவாயி உருவாக்கப்படலாம்.


🔰Diode ஒன்று உருவாக்கப்படும் போது சந்தியில் வரிதாத்க்கல் பிரதேசம் ஒன்று தோன்றும்.இப்பிரதேசம் காவலி போல் தொழிற்படும்.


🔰இருவாயி முன்முகக்கோடலுற்றிருக்கையில் பெரும்பான்மை சுமைக்காவிகள் சந்தியை கடப்பதுடன் வறிதாக்கல் பிரதேசம் அழிவுறும்.இந்நிலையில் Diode மின்னைக்கடத்தும்.

  பின்முக கோடலில் மின்னைக்கடத்தாது.


🔰முன்முககோடலில் Diode ஒன்றின் தடை மிகசிறியதாகவும் பின்முககோடலில் மிக உயர்வாகவும் இருக்கும்.


🔰Diode,

முன்முகக்கோடலில் இருக்கும் போது மூடிய ஆளி போலும் ,பின்முககோடலில் திறந்த ஆளியாகவும் தொழிற்படும்.


🔰Diode மின்னைக்கடத்தும் போது கதோட்டு சார்பாக அனோட்டு நேர் ஆக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.


🔰Diode ன் [ I - V graph] நேர்கோடன்று.முன்முககோடலில்,

  Si diode ~ 0.7V

  Ge diode ~ 0.3V


🔅 Zenar diode :

  அழுத்தத்தை ஒழுங்காக்க பயன்படும்.

  பின்முகக்கோடல் நிலையில் தொழிற்படும்.


 🔅 LED :

  முன்முகக்கோடல் நிலையில் தொழிற்படும்.

  மின்சக்தி -----> ஒளிச்சக்தி


 🔅Photo diode:

பின்முகக்கோடல் நிலையில் தொழிற்படும்.

 ஒளிச்சக்தி-----> மின்சக்தி

 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹


ஏனைய physics sort Notes 👇👇

Physics short Notes

Previous Post Next Post