முதல் வளர்ச்சி முற்றுப்பெற்ற பொதுமைப்பாடான இருவித்திலைத் தாவரத் தண்டின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தின் நுணுக்காட்டியில் தென்படும் கட்டமைப்பு தொழில்கள்

Header Ads Widget


முதல் வளர்ச்சி முற்றுப்பெற்ற பொதுமைப்பாடான இருவித்திலைத் தாவரத் தண்டின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தின் நுணுக்காட்டியில் தென்படும் கட்டமைப்பு தொழில்கள்

 


மேற்றோல் 

🌱 மிக வெளிப்புறமாக அமைந்துள்ள தனிக கலப்படைக் கலங்கள் உடையது , 

🌱 கியுற்றின் புறத்தோலினால் மூடப்பட்டது . 

🌱 மேற்றோல் கலங்களுக்கிடையே இலைவாய்கள் காணப்படும்.


மேற்றோலின் தொழில்கள் 

🌱 மேற்றோல் கலங்கள் தண்டின் உள்ளான பகுதிகளை உலர்தல் , தொற்று என்பவற்றிலிருந்து பாதுகாக்கின்றது . 

🌱 இலைவாய்கள் வாயுப்பரிமாற்றம் , ஆவியுயிர்ப்பு என்பவற்றில் உதவும் , 


மேற்பட்டை 

🌱 மேற்றோலை அடுத்து உட்புறமாகக் காணப்படும் பலபடைக் கலங்கள் உடைய கட்டமைப்பு 

🌱 பெரும்பாலும் புடைக்கலவிழையக் கலங்களைக் கொண்டது . 

🌱 இவை பெரும்பாலும் சேமிப்பு புடைக்கலவிழையமாகும் 

🌱 ஒரு சிறிய பகுதி பச்சையவிழையமாகும் .. 

🌱 மேற்றோலிற்கு உடனடியாகக் கீழே ஒட்டுக்கலவிழையக் கலங்கள் காணப்படும் . 

🌱 மேற்பட்டையில் வல்லருகுக்கலவிழைய கலங்களும் / நார்களும் காணப்படலாம் . 


மேற்பட்டையின் தொழில்கள் 

🌱 சேமிப்பு புடைக்கலவிழையம் உணவைச் சேமிக்கும் . 

🌱 ஒட்டுக்கலவிழையமும் வல்லருகுக்கலவிழைய கலங்களும் / நார்களும் மேலதிக ஆதாரத்தை வழங்கும் . 

🌱 பச்சையவிழையம் 

ஒளித்தொகுப்பு செய்யும் . 


கலன்கட்டுக்கள் 

🌱 மேற்பட்டையை அடுத்து கலன்கட்டுக்கள் காணப்படும் 

🌱 கலன்கட்டில் முதலான உரியம் மேற்பட்டையை நோக்கியும் 

🌱 முதலான காழ் மையவிழையத்தை நோக்கியும் காணப்படுவதுடன் ,

 🌱இவை இரண்டுக்குமிடையே ஒரு மாறிழையமும் காணப்படும் .

🌱கலன்கட்டின் வெளிப்புறமாக ஒரு கூட்டம் வல்லருகுக்கலவிழைய கலங்கள் / நார்கள் காணப்படும்.


கலன்கட்டுக்கள் தொழில்கள் 

🌱 காழ் நீரையும் கனியுப்பையும் கடத்தும் 

🌱 உரியம் உணவகை கடத்தும்.

🌱 மாரிழையம் துணை வளர்ச்சியின் போது கலன் மாறிழைய வளையத்தை தோற்றுவிக்கும் . 

🌱 வல்லருகுக்கலவிழையக் கலங்கள் கலன்கட்டிற்கு பொறிமுறை ஆதாரத்தை வழங்கும் / உறுதியளிக்கும் , 


 மையவிழையம் 

🌱 கலன்கட்டுகளின் உட்புறமாக புடைக்கலவிழையக் கலங்களாலான 

🌱 பெரிய மையவிழையம் ஒன்று காணப்படும் . 

🌱 இவை சேமிப்பு புடைக்கலவிழையத்ததால் மாத்திரம் ஆனது


 மையவிழையத்தின் தொழில் 

🌱 உணவை சேமிக்கும் . 

🌱 மையவிழையத்தை மேற்பட்டையுடன் இணைக்கும் அடிப்படையிழையம் 

🌱 கலன்கட்டுகளுக்கிடையில் அமைந்திருக்கும்.


Biology sort Notes


                Click & join
 
























உங்களது நண்பர்களுடன், ஏனைய குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.