Answer : 5⃣
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
🔸நடுக்கியல் [ Seismology]🔸
புவிக்கூடாகவும் ,புவியை சுற்றியும் அசைந்து செல்லும் நடுக்கஅலைகள்,புவிநடுக்கம் தொடர்பான கற்கை நடுக்கியல் ஆகும்.
புவியினுள்ளே பாறையொன்றின் திடீர் உடைவு or வெடித்தல் காரணமாக உருவாக்கப்படும் சக்தி நடுக்க அலைகளாக வெளிவருகின்றது.இச்சக்தி அலைகள் புவியினூடு நகர்ந்து செல்வதுடன் நடுக்கவரையிலும் பதிவாகின்றன.
நடுக்க அலைகள் 2 வகைப்படும்.
1) உடலக அலைகள்(Body waves )
1⃣ . P - அலைகள்[ Primary waves ]
2⃣. S - அலைகள் [ Secondary waves]
2) மேற்பரப்பு அலைகள்(Surface waves )
1⃣. "லவ்" அலைகள் [Love waves ]
2⃣. "றேலி" அலைகள்[ Rayleigh waves]
1) உடலக அலைகள்
● புவியின் உட்புறத்தினூடு செல்லும் ," உயர்மீடிறன்" கொண்ட அலைகள்.
1⃣ : P - அலைகள்
■ நடுக்க அவதானிப்பு நிலையமொன்றை மிக வேகமாக முதலில் வந்தடையும் நடுக்கஅலைகள்.
■ இவை திண்ம , திரவப்படைகளினூடு செல்லக்கூடியவை.
■ இவை பாறைகளை இழுத்துத்தள்ளி அலைத்துணிக்கைகள் நகரும் திசையிலேயே சக்தியை கடத்துகின்றன.
■ நெட்டாங்கு அலைகள்.
& நெருக்கல் அலைகள் எனவும் அழைக்கப்படும்.
2⃣ : S - அலைகள்
■ P - அலைகளிலும் பார்க்க குறைந்த வேகத்தை கொண்டது.
■ திண்மப்படைகளினூடு மட்டும் செல்லக்கூடியவை.
■ அலைசெல்லும் திசைக்குச்செங்குத்தாக பாறைகளை இழுத்துத்தள்ளுவதால்
இவை ஒருவகையான குறுக்கலைகள் ஆகும்.
2) மேற்பரப்பு அலைகள்.
● புவியோட்டினூடாக மட்டும் பயணிக்கும் இவை உடலக அலைகளிலும் பார்க்க குறைந்த மீடிறன் கொண்டவை.
● மிக இலகுவில் நிலநடுக்கப்பதிகருவியின் மூலம் வேறுபடுத்தவல்லன.
● உடலக அலைகளின் பின் தோன்றினாலும் இவ்வலைகளே நிலநடுக்கத்துடன் தொடர்புள்ள இழப்புகளுக்கும் , அழிவுகளுக்கும் பிரதான காரணமாக அமைகின்றன.
1⃣ : Love Waves
■ இவை நிலத்தில் பக்கம் பக்கமாகச் செல்லும் மிக வேகம் கூடிய அலைகள்.
■ ஓட்டின் மேற்பரப்புக்கு எல்லைப்படுத்தப்பட்டு, முழுமையாக கிடை இயக்கத்தை இவை உற்பத்தியாக்குகின்றன.
2⃣ : Rayleigh Waves
■ சமுத்திரத்தி்ல் or வாவியொன்றில் அலைகள் உருண்டு செல்வது போல இவ்வலைகள் தரையினூடாக உருண்டு செல்கின்றன.
■ இவ்வுருளுகையானது தரையில் மேல்கீழாகவும் , பக்கம் பக்கமாகலும் நடைபெறுகின்றது.
■ நிலநடுக்கத்தின் போது அதிகளவு குலுக்கல் ஏற்படக்காரணம் ஏனைய அலைகளிலும் பார்க்க பெரிதாக அமையும் றேலி அலைகளாகும்.