Answer
H அதிகரிக்கும் போது l ம் நேர் விகிதசமனாக அதிகரிக்கும்
ஆனால்
நீர் இல்லாதபோது H = 0 ஆனால் ஆரம்பத்தில் ஒரு நெருக்கம் காணப்படும்
சமன்பாடு பாவிக்காமலும், யோசித்து விடையைப் பெறலாம்.
இவ்வாறான வரைபு, 2வது ஆகும்!
இலகுவான கேள்வி
Answer
H=R எனின் செய்யப்பட்ட வேலை பூச்சியம்
ஆகவே வேகம் பூச்சியம்
Answer 04
2015/09 MCQ
இது இலகுவாக யோசிக்கலாம்
C=A€/d
1= A * 9*10-¹²/9*10-3
A= 10^9 m²
A= 1*10³ *10^6 m²
A=1000 km²
km *km = 1000m*1000m=10^6m²
Answer
கொள்ளளவம்
C=Aε0/d
h உயரத்திற்கு k மின்நுழையம் உள்ளது.
h=0 எனின்
C=wlε0/d
h=0 ஐ இட மேலே குறிப்பிட்ட விடையைத் தருவது 1 வது மட்டுமே.
சரியான விடை: (2)
விளக்கம்
அதாவது,
வெப்பப் பாய்ச்சல் வீதம் = வெப்பக் கடத்துதிறன் x கு.வெ.பரப்பு x வெப்பநிலைப் படித்திறன்
கோல் நன்றாக காவற்கட்டிடப்பட்டுள்ளது. எனவே, வெப்ப இழப்பு இல்லை. அத்துடன் கோலானது சீரான குறுக்கு வெட்டுப் பரப்பையும் கொண்டுள்ளது. இணைக்கப்பட்ட இரு கோல்களும் சர்வசமனானவை என்பதால், அவற்றின் வெப்பக் கடத்துதிறன்களும் சமமானவை. எனவே, உறுதியான வெப்பப் பாய்ச்சல் பேணப்படுவதால், உலோகக் கோல்களில் வெப்பநிலைப் படித்திரன்கள் (வரைபின் படித்திரன்கள்) ஒரேயளவாக இருக்கும்.
C ஆனது அற்பமாகக் கடத்தும் திரவியத்தினால் ஆக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் வெப்பக் கடத்துதிறன் குறைவாக இருக்கும். இதனால், வெப்பநிலைப் படித்திறன் (வரைபின் படித்திறன்) உலோகக் கோல்களில் இருப்பதைவிட அதிகமாக இருக்கும்.
வெப்பமானது A யிலிருந்து B இற்கு பாய்ச்சப் படுவதால், A யில் வெப்பநிலை B யிலும் அதிகமாக இருக்கும்.
மேலுள்ள தகவல்களின் அடிப்படையில் வரைபு இரண்டு (விடை 2) பொருத்தமானதாக இருக்கும் என தீர்மானிக்கலாம்.
Answer
சரியான விடை: (5)
விளக்கம்
நிறையானது இறுக்கமான கயிற்றின் நடுப் பகுதியில் கட்டப்பட்டுள்ளதால், கயிற்றில் உள்ள இழுவைகள் (T) சமனானவையாகவும், கயிறு நிலக்குத்துடன் ஆக்கும் கோணங்கள் சமனானவையாகவும் (θ) இருக்கும்.
நிலைக்குத்துத் தளத்தில் உள்ள விசைகளை சமன்படுத்தினால்...
2 x T cosθ = W
θ ஆனது, 60° இலும் கூடியதாகவும் 90° க்கு கிட்டியதாகவும் இருக்கின்றது.
cos60° = 0.5 ஆகும். cos90° = 0 ஆகும்.
θ ஆனது 60° இலும் கூடியதாகவும் 90° க்கு கிட்டியதாகவும் இருப்பதனால், cosθ ஆனது பூச்சியத்திற்கு கிட்டிய பெறுமானமாக (0.5 இலும் குறைந்ததாக) இருக்கும்.
எனவே, மேலுள்ள சமன்பாட்டின்படி, T ஆனது W இலும் பார்க்க மிகக் கூடிய பெறுமானமாக இருக்கும்.
Answer
சரியான விடை: (1)
விளக்கம்
ஊஞ்சலாடலின் போதான அலைவு இயக்கத்தில் உயர்கதியானது, அலைவின் மையப்பகுதியை; அதாவது சுழலைப் புள்ளியிலிருந்தான நிலைக்குத்தைக் கடக்கும்போதே பெறப்படும். இந்நிலையில் ஒரு கயிற்றில் உள்ள இழுவை T எனின்,
மையநாட்ட விசை = 2T - mg
(இரு கயிறுகள் ஊஞ்சலை தாங்குவதால், T யின் இருமடங்கு பயன்படுத்தப்படுகின்றது)
அதேவேளை,
மையநாட்ட விசை = mv2/r
இங்கு r ஆனது கயிற்றின் நீளம் ஆகும்.
ஆகவே,
2T - mg = mv2/r
2T = mv2/r + mg
2T = [(20 x 32)/3] + (20 x 10)
2T = 260
T = 130 N
எனவே, ஒவ்வொரு கயிற்றிலும் இருக்கும் உயர் இழுவை 130 N ஆகும்.
Answer
சரியான விடை: (4)
விளக்கம்
வெப்பநிலை அதிகரிக்கப்படும் போது, எந்த ஒரு பொருளும் விரிவடையும். எனினும் ஒவ்வொரு பொருளும் தத்தமது வெப்ப விரிவுக் குணகத்திற்கு ஏற்றால் போல வெவ்வேறு அளவுகளில் விரிவடையும்.
கண்ணாடியுள் இரச வெப்பமானியில், வெப்பநிலை அதிகரிப்புடன், கண்ணாடி மற்றும் இரசம் என்பன விரிவடையும். எனினும், கண்ணாடியின் விரிவானது இரசத்தின் விரிவிலும் பார்க்க குறைவாக இருக்கும்.
இதனால், இரச நிரல் விரைவாக ஏறுகின்றது.
செவ்விய வெப்பக் கடத்தி என்பது, வெப்பத்தை விரைவாகவும் குறைந்த சக்தி இழப்புடனும் கடத்தக் கூடிய பதார்த்தங்கள் ஆகும்.
கண்ணாடி ஒரு அரிதில் கடத்தி. அதாவது வெப்பத்தை விரைவாக கடத்தாது.
வெப்பநிலை அதிகரிக்கும் போது பொதுவாக பதார்த்தங்கள் சீராக விரிவடைவதில்லை. எனினும் இரசமானது சீரான விரிவைக் காட்டும். எனவே, சீரான அளவிடையை பயன்படுத்தி இரசத்தின் விரிவை அளப்பது இலகுவானது. வெப்பமானித் திரவமாக இரசம் அதிக அளவில் பயன்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
Answer
சரியான விடை: (3)
விளக்கம்
இரண்டு புகையிரதங்களும் ஒரே திசையில், ஒரே கதியில் ஒரு நேர்ப்பாதையில் செல்கின்றன. எனவே, இவ்விரு புகையிரதங்களுக்கும் இடையே சார்பு வேகம் இல்லை. அதாவது, இவ்விரு புகையிரதங்களுக்கும் இடையிலுள்ள தூரம் மாற்றமடையவில்லை.
எனவே, முதற் புகையிரதத்தில் ஒலிக்கப்படும் சீழ்க்கையின் மீடிறனிலேயே இரண்டாவது புகையிரதத்தில் இருப்பவர் சீழ்க்கை ஒலியைக் கேட்பார். அதாவது, சார்பு வேகம் இல்லாததால், கேட்கும் மீடிறனிலும் (தோற்ற மீடிறன்) மாற்றமிருக்காது.
எனவே, விடை (3) சரியானது.
இரண்டு புகையிரதங்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி குறைந்துகொண்டு வந்தால், கேட்கப்படும் ஒலியின் மீடிறன் அதிகரித்துக் காணப்படும்.
இரண்டு புகையிரதங்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி அதிகரித்துச் சென்றால், கேட்கப்படும் ஒலியின் மீடிறன் குறைவாக இருக்கும்.
Answer
சரியான விடை: (3)
அலைகளை குறுக்கலைகள், நெட்டாங்கு அலைகள் என இரண்டாகப் பிரிக்கலாம். அலை செல்லும் திசைக்கு செங்குத்தாக ஊடக துணிக்கைகள் அதிர்வதன் மூலம் கடத்தப்படும் அலைகள் குறுக்கலைகள் ஆகும். அலை செல்லும் திசையில் ஊடக துணிக்கைகளின் நெருக்கல், ஐதாக்கல் மூலம் செலுத்தப்படும் அலைகள் நெட்டாங்கு அலைகள் ஆகும்.
மின்காந்த அலைகள், குறுக்கலைகள் ஆகும். லேசர் ஒளி, X - கதிர்கள், நுணுக்கலைகள் (Microwaves), வானொலி அலைகள் என்பன வெவ்வேறு மீடிறன்களைக் கொண்டிருந்தாலும், இவை நான்கும் மின்காந்த அலைகளாகும். எனவே, இவை நான்கும் குறுக்கலைகள் ஆகும்.
கழியொலி அலைகள் என்பவை, கேள்தகு வீச்சிலும் பார்க்க உயர்ந்த மீடிறனைக் கொண்ட ஒலி அலைகள் ஆகும். ஒலி அலைகள், நெட்டாங்கு அலைகள். எனவே, கழியொலி அலைகள் நெட்டாங்கு அலைகள் ஆகும்.
Answer
சரியான விடை: (4)
விளக்கம்
ஒரு நிற ஒளிக்கதிர் ஒன்று அரியம் ஒன்றினூடாக சென்ற பின்னர் இழிவு விலகலுருவதை அருகிலுள்ள உரு காட்டுகின்றது.
இழிவு விலகல் அடையும் போது, அரியத்தின் முகங்களினால் ஏற்படுத்தப்படும் விலகல் கோணங்கள் சமமாக இருக்கும்.
உருவில்,
d = அரிய முகமொன்றினால் உருவாகும் விலகல் கோணம்
D = இழிவு விலகல் கோணம்
முக்கோணம் ABC ஐ கருதுக.
D = d + d
குறிப்பு: முக்கோணி ஒன்றின் புறக்கோணம், அதன் அகத்து-எதிர் கோணங்களின் கூட்டுத்தொகைக்கு சமமாகும்.
அரிய முகம் ஒன்றினால் உருவாகும் விலகல் கோணம் d = 20° என தரப்பட்டுள்ளது.
ஆகவே, இழிவு விலகல் கோணம் D = 40° ஆகும்.
சரியான விடை: (3)
விளக்கம்
ஒரு செக்கனில் வழங்க வேண்டிய நீரின் திணிவு = 1/60 kg
ஒரு செக்கனில் வழங்க வேண்டிய வெப்பம்,
H = m s ΔΘ
= 1/60 x 4200 x (30 - 20)
= 700 J
ஆகவே தேவைப்படும் இழிவு வலு 700 W ஆகும்.
குறிப்பு: வெப்ப இழப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.