Extension of time again for university application (பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கு காலம் மீண்டும் நீடிப்பு)

 


Extension of time again for university application (பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கு காலம் மீண்டும் நீடிப்பு)


 

பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கு காலம் மீண்டும் நீடிப்பு


நாட்டில் நிலவிய சூழல் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (ugc) வழங்கியுள்ளது . இதன் படி , 2021.ஜுலை 26 முதல் 2021 ஜுலை 30 வரையான காலப்பகுதியில் online விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க சந்தரப்பம் வழங்கப்படும் என ஆணைக்குழு (ugc) அறிவித்துள்ளது . 





அத்தோடு , இக்காலப்பகுதியில் online விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு அடுத்து வரும் இரு வார காலப்பகுதியில் தமது பாடநெறித் தெரிவை மீள ஒழுங்குபடுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என ugcஇனால் அறிவிக்கப்பட்டுள்ளது . ஜுலை 31 முதல் ஓகஸ்ட் 14 வரை இச்சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.


 விண்ணப்பத்திற்கான இணைப்பு 26 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .


Educational News

Previous Post Next Post