மேற்றோல்
🌱 மிக வெளிப்புறமாக அமைந்துள்ள தனிக கலப்படைக் கலங்கள் உடையது ,
🌱 கியுற்றின் புறத்தோலினால் மூடப்பட்டது .
🌱 மேற்றோல் கலங்களுக்கிடையே இலைவாய்கள் காணப்படும்.
மேற்றோலின் தொழில்கள்
🌱 மேற்றோல் கலங்கள் தண்டின் உள்ளான பகுதிகளை உலர்தல் , தொற்று என்பவற்றிலிருந்து பாதுகாக்கின்றது .
🌱 இலைவாய்கள் வாயுப்பரிமாற்றம் , ஆவியுயிர்ப்பு என்பவற்றில் உதவும் ,
மேற்பட்டை
🌱 மேற்றோலை அடுத்து உட்புறமாகக் காணப்படும் பலபடைக் கலங்கள் உடைய கட்டமைப்பு
🌱 பெரும்பாலும் புடைக்கலவிழையக் கலங்களைக் கொண்டது .
🌱 இவை பெரும்பாலும் சேமிப்பு புடைக்கலவிழையமாகும்
🌱 ஒரு சிறிய பகுதி பச்சையவிழையமாகும் ..
🌱 மேற்றோலிற்கு உடனடியாகக் கீழே ஒட்டுக்கலவிழையக் கலங்கள் காணப்படும் .
🌱 மேற்பட்டையில் வல்லருகுக்கலவிழைய கலங்களும் / நார்களும் காணப்படலாம் .
மேற்பட்டையின் தொழில்கள்
🌱 சேமிப்பு புடைக்கலவிழையம் உணவைச் சேமிக்கும் .
🌱 ஒட்டுக்கலவிழையமும் வல்லருகுக்கலவிழைய கலங்களும் / நார்களும் மேலதிக ஆதாரத்தை வழங்கும் .
🌱 பச்சையவிழையம்
ஒளித்தொகுப்பு செய்யும் .
கலன்கட்டுக்கள்
🌱 மேற்பட்டையை அடுத்து கலன்கட்டுக்கள் காணப்படும்
🌱 கலன்கட்டில் முதலான உரியம் மேற்பட்டையை நோக்கியும்
🌱 முதலான காழ் மையவிழையத்தை நோக்கியும் காணப்படுவதுடன் ,
🌱இவை இரண்டுக்குமிடையே ஒரு மாறிழையமும் காணப்படும் .
🌱கலன்கட்டின் வெளிப்புறமாக ஒரு கூட்டம் வல்லருகுக்கலவிழைய கலங்கள் / நார்கள் காணப்படும்.
கலன்கட்டுக்கள் தொழில்கள்
🌱 காழ் நீரையும் கனியுப்பையும் கடத்தும்
🌱 உரியம் உணவகை கடத்தும்.
🌱 மாரிழையம் துணை வளர்ச்சியின் போது கலன் மாறிழைய வளையத்தை தோற்றுவிக்கும் .
🌱 வல்லருகுக்கலவிழையக் கலங்கள் கலன்கட்டிற்கு பொறிமுறை ஆதாரத்தை வழங்கும் / உறுதியளிக்கும் ,
மையவிழையம்
🌱 கலன்கட்டுகளின் உட்புறமாக புடைக்கலவிழையக் கலங்களாலான
🌱 பெரிய மையவிழையம் ஒன்று காணப்படும் .
🌱 இவை சேமிப்பு புடைக்கலவிழையத்ததால் மாத்திரம் ஆனது
மையவிழையத்தின் தொழில்
🌱 உணவை சேமிக்கும் .
🌱 மையவிழையத்தை மேற்பட்டையுடன் இணைக்கும் அடிப்படையிழையம்
🌱 கலன்கட்டுகளுக்கிடையில் அமைந்திருக்கும்.